August 5, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

கோவிட்டை கட்டுப்படுத்த 8 வாரங்களுக்கு முழு ஊரடங்கு தேவை: ஐசிஎம்ஆர் தகவல்

புது தில்லி, மே 13

இந்தியாவில் கோவிட் தொற்று இரண்டாவது ஆலை அதிவேகமாக பரவி வருவதால் அதனை கட்டுப்படுத்த நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 6 முதல் 8 வாரங்களுக்கு முழு ஊரடங்கு தேவை என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழக(ஐசிஎம்ஆர்) தலைவர் பல்ராம் பார்கவா கருத்து தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: இந்தியாவில் கோவிட் இரண்டாவது ஆலை அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற படுக்கை வசதிகள் இல்லாமலும், ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக உயிர் இழக்கும் சூழல் உருவாகியுள்ளது.

பல மாநில அரசுகள் பரவலை கட்டுப்படுத்த பல கட்டங்களான கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன. அவை பெரும்பாலும் வாராந்திர அல்லது குறுகிறய நாள்கள், வாரங்கள் என அறிவித்துள்ளன.

இந்நிலையில், இந்தியாவில் அதிவேகமாக பரவி வரும் கோவிட் தொற்றை கட்டுப்படுத்த பாதிப்பு அதிகமுள்ள பெரும்பாலான பகுதிகளில் 6 முதல் 8 வாரங்களுக்கு முழு ஊரடங்கு தேவை உள்ளது என தெரிவித்துள்ளது.

மேலும், பாதிப்பு 10 சதத்திற்கும் அதிகமாக உள்ள அனைத்து மாவட்டங்களில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அவசியம் அமல்படுத்த வேண்டும்.

நாட்டின் தலைநகரில் தொற்று பாதிப்பு சுமார் 35 சதத்தை எட்டிய நிலையில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது அது 17 சதமாக குறைந்துள்ளது. அங்கு பொதுமுடக்கத்துக்கு தளர்வளிக்கப்பட்டால், அது ஒரு பேரழிவாக தான் இருக்கும் என்று பல்ராம் பார்கவா தெரிவித்துள்ளார்.

மேலும் தொற்று பரவலால் நாடு பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. தினமும் சுமார் 3,50,000 பாதிப்புகளும், 4 ஆயிரம் இறப்புகளும் பதிவாகின்றன. மருத்துவமனைகளில் சடலங்கள் நிரம்பி வழிகின்றன, மருத்துவமனைகளில் ஊழியர்கள் பற்றாக்குறை, உயிர்காக்கும் ஆக்சிஜன் மற்றும் மருந்துகள், தடுப்பு மருந்தகள் பற்றாக்குறைகள் நிலவி வருகின்றன. தொற்று பாதிப்பு மற்றும் உயிரிழப்பு 10 மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மருத்துவ ஆராய்ச்சி வல்லுநர்கள் கூறுகின்றனர்.

Spread the love