August 15, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

கோவிட்டை சமாளிக்க ரூ.7,500 கோடி அமெரிக்கா இந்தியாவுக்கு மருத்துவ உதவி

புது தில்லி, மே 11

இந்தியாவுக்கு மருத்துவ உதவிகளைச் செய்யுமாறு பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு விடுத்த வேண்டுகோளைத் தொடர்ந்து அமெரிக்காவிலிருந்து மருத்துவ உதவிகள் வந்துகொண்டே இருக்கின்றன.

கடந்த மாதம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பிரதமர் மோடியுடன் நீண்ட நேரம் பேசியதோடு, கோவிட்டை தடுக்க இந்தியாவுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அமெரிக்கா செய்யும் என உறுதி அளித்தார். மேலும், இரு நாடுகளும் இணைந்து இந்த வைரஸை ஒழிக்க கூட்டாக பாடுபடுவோம் என்றார்.

நட்பு நாடான இந்தியாவுக்கு அமெரிக்க அரசு அறிவித்துள்ள உதவிகளோடு, நிறுவனங்களும், இந்திய-அமெரிக்க வர்த்தக கூட்டமைப்புகளும் உதவிகளை தொடர்ந்து அளித்து வருகின்றன.

அமெரிக்க அரசு 10 கோடி டாலர் மருத்துவ உதவிகளை அளிப்பதாக அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இத்துடன் மருந்து தயாரிப்பு நிறுவனமான பைஸர் 7 கோடி டாலர் உதவி மற்றும் 4.5 லட்சம் ரெம்டெசிவிர் குப்பிகளையும் அனுப்பியுள்ளது.

இதுதவிர போயிங், மாஸ்டர்கார்டு நிறுவனங்கள் தலா ஒரு கோடி டாலர் (ரூ.75 கோடி) நிதி உதவி அளிப்பதாக அறிவித்துள்ளன. கூகுள் நிறுவனம் 1.8 கோடி டாலர் அளித்துள்ளது. இதுதவிர முன்னணி நிறுவனங்களின் சிஇஓ-க்கள் அடங்கிய சர்வதேச குழு 3 கோடி டாலருக்கு மருந்து பொருள்களை அனுப்புவதாக அறிவித்துள்ளது.

இந்தியாவுக்கு அமெரிக் காவிலிருந்து கிடைக்கும் உதவிகளின் மொத்த மதிப்பு இம்மாத இறுதிக்குள் 100 கோடி டாலரை எட்டிவிடும் (ரூ.7,500 கோடி) என்று அமெரிக்க-இந்திய உத்திசார் கூட்டமைப்பின் தலைவர் முகேஷ் ஏஹி குறிப்பிட்டுள்ளார்.

Spread the love