புது தில்லி, மே 4
கோவிட் தொற்று நோயாளிகளுக்கு உதவும் வண்ணம் எஸ்பிஐ வங்கி 71 கோடி நிதியுதவி அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது குறித்து எஸ்பிஐ வங்கி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளதாவது:
நாட்டில் கோவிட் தொற்றின் 2வது அலையை எதிர்த்து போராடும் இந்தியாவிற்கு உதவும் வகையில், கோவிட் தடுப்பு பணிகளுக்கு எஸ்பிஐ வங்கி ரூ.71 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது.
இதில் ரூ.30 கோடி கோவிட் தொற்றால் அதிகம் பாதிக்கபட்ட சில மாவட்டங்களில், 1000 படுக்கைகள் கொண்ட தற்காலிக மருத்துவமனைகள் அமைக்கவும், 250 ஐசியூ வசதிகள் கொண்ட சிறப்பு படுக்கைகளை நிறுவவும், தனிமைப்படுத்தும் வசதிகள் கொண்ட 1000 படுக்கைகள் உருவாக்கவும் வழங்கப்படுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.