August 5, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

கோவிட் தடுப்பூசிகள் நேரடி கொள்முதல் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி

புது தில்லி, ஏப்.22

தனியார் மருத்துவமனைகள் கோவிட் தொற்று தடுப்பூசிகளை மே 1-ஆம் தேதிமுதல் உற்பத்தியாளர்களிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்ய அரசு அனுமதித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: தடுப்பூசி உற்பத்தியாளர்கள் 50 சத தடுப்பூசி விநியோகத்துக்கான விலையை முன்கூட்டியே அறிவிப்பு செய்வார். அதன் அடிப்படையில், வரும் மே 1ம் தேதிக்கு முன்பாக திறந்த சந்தையில் மாநில அரசுகள் தடுப்பூசிகளை வங்கிக் கொள்ளமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல, தனியார் மருத்துவமனைகளும் மத்திய அரசு வழிகளின் மூலம் தடுப்பூசி பெறுவதோடு, இந்த 50 சத விநியோக நடைமுறையின் கீழ் நேரடியாகவும் தடுப்பூசிகளை கொள்முதல் செய்து கொள்ளலாம்.

மேலும், தனியார் மருத்துவமனைகள் தடுப்பூசி செலுத்துவதற்கு வசூலிக்கும் கட்டணம் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும், அதே நேரம், தனியார் தடுப்பூசி மையங்கள் அரசிடமிருந்தே தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்யவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தடுப்பூசி செலுத்த ரூ. 250 வரை மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற இப்போதைய நடைமுறை மே 1-ஆம் தேதிமுதல் முடிவுக்கு வந்துவிடும் என்றும் மத்திய சுகாதார அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டில் உற்பத்தி செய்யபடும் தடுப்பூசி விநியோகம் என்பது 50 சதவீதம் மத்திய அரசு மூலமாகவும், மீதமுள்ள 50 சதவீதம் மத்திய அரசின் வழிமுறைகள் அல்லாத பிற வழிகளிலும் விநியோகிக்க அனுமதிக்கப்படும்.

மேலும், மத்திய அரசு சார்பில் மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் தடுப்பூசி அளவு என்பது, சராசரி பயன்பாடு, தடுப்பூசி வீணாதல், கோவிட் பாதிப்பு நிலை ஆகியவற்றின் அடிப்படையில் மாநிலங்களுக்கு மாநிலம் மாறுபடும் என்றும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love