August 8, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

கோவிட் தடுப்பூசிக்கு ஒதுக்கப்பட்ட நிதியை மத்திய அரசும் பயன்படுத்தலாம்: நிதியமைச்சகம்

புது தில்லி, மே 11

கோவிட் தடுப்புத் திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட ரூ.35,000 கோடி நிதியை மாநிலங்களுக்கான பகிர்வு என்ற தலைப்பின் கீழ் மத்திய அரசு பயன்படுத்துவதற்கு எந்தவிதத் தடையுமில்லை என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது:

மத்திய அரசு தாக்கல் செய்திருந்த 2021-22ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் ரூ.35,000 கோடி தடுப்பூசிக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. அதற்காக நாடாளுமன்றத்தில் நிதி கோரும் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. அத்தீர்மானமானது “மாநிலங்களுக்கான பகிர்வு’ என்ற தலைப்பில் தாக்கல் செய்யப்பட்டு, நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறப்பட்டது.

எனவே, ரூ.35,000 கோடி முழுவதையும் மாநில அரசுகளுக்கே மத்திய அரசு பகிர்ந்தளிக்க வேண்டும் என்று சிலர் தெரிவித்தனர். இது குறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட செய்தி அறிக்கையில்,

நிர்வாக வசதிக்காகவே “மாநிலங்களுக்கான பகிர்வு’ என்ற தலைப்பின் கீழ் கோவிட் தடுப்பூசிக்காக ரூ.35,000 கோடி பெறப்பட்டது. அந்த நிதியை மத்திய அரசால் பயன்படுத்த முடியாது என்பது பொருளல்ல. அந்த நிதியைப் பயன்படுத்தியே கோவிட் தடுப்பூசிகளை மத்திய அரசு கொள்முதல் செய்து வருகிறது. அத்தடுப்பூசிகள் மாநில அரசுகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. மத்திய சுகாதார அமைச்சகம் அந்த நிதியை நிர்வகித்து வருகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Spread the love