June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

கோவிட் தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களுக்கு ரூ.4,500 கோடி கடனுதவி: நிதியமைச்சகம் ஒப்புதல்

புது தில்லி, ஏப்.20

கோவிட் தொற்று தடுப்பூசி மருந்து தயாரிக்கும் இரு நிறுவனங்களுக்கு, ரூ.4,500 கோடி கடனுதவி வழங்க, மத்திய நிதிஅமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், புனேவைச் சேர்ந்த, சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம், கோவிUல்டு என்ற கோவிட் தடுப்பூசி மருந்தை தயாரிக்கிறது.

இந்நிறுவனம், மாதம், 10 கோடி, டோஸ் தடுப்பூசி மருந்து தயாரிக்கும் திறன் உடையது. தற்போது, கோவிட் தொற்று இரண்டாவது அலை வேகமாக இந்தியாவில் பரவி வருவதால், மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வருகின்றனர். இதனால், தடுப்பூசி மருந்து தயாரிப்பை அதிகரிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசு, ரூ.3,000 கோடி வழங்கினால், 10 கோடிக்கும் அதிகமான, டோஸ் மருந்து தயாரிக்கலாம் என, சீரம் நிறுவன தலைவர் பூனாவாலா, அண்மையில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்திற்கு, ரூ.3,000 கோடி மற்றும் கோவாக்சின் என்ற தடுப்பூசி மருந்து தயாரிக்கும், பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு, ரூ.1,500 கோடி கடனுதவி வழங்க, மத்திய நிதிஅமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

Spread the love