புது தில்லி, ஏப்.23
கோவிட் தடுப்பூசி வினியோகத்திற்கு, ஆளில்லா குட்டி விமானத்தை (டிரோன்) பயன்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்திற்கு, விமான போக்குவரத்து அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இது குறித்து விரிவான செய்தியாவது: இந்தியாவில், மே 1 முதல், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கோவிட் தொற்றுக்கு தடுப்பூசி போட, அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், மலைப் பிரதேசங்களில் தடுப்பூசிக்கான தேவை அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
அத்தகைய சூழலில், டிரோன்களை பயன்படுத்துவது சாத்தியமா என, மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தெரிகிறது. இதையயாட்டி, விமான போக்குவரத்து அமைச்சகம், டிரோன் மூலம் தடுப்பூசி விநியோகிப்பது குறித்து ஆய்வு செய்ய, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது.