புது தில்லி, ஏப்.20
ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம் தான் தயாரித்துள்ள கோவிட் தொற்று தடுப்பூசியின் 3வது கட்ட சோதனையை இந்தியாவில் மேற்கொள்ள மத்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இது குறித்து செய்தியாவது: ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம் ஒரே ஒரு முறை போடத்தக்க கோவிட் தடுப்பூசியை தயாரித்துள்ளது. இந்த தடுப்பூசி வெளிநாடுகளில் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் இந்தியாவிலும் பயன்படுத்த ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இதற்கு முன்னதாகஇந்தியாவில் 3வது கட்ட பரிசோதனைகள் மேற்கொள்வதுடன் இறக்குமதி உரிமம் பெறுவதற்காகவும் மத்திய மருந்து கட்டுப்பாட்டு நிறுவனத்திற்கு ஜான்சன் அண்டு ஜான்சன் விண்ணப்பித்துள்ளது. மேலும், தடுப்பூசிகளுக்கான தேவை கடுமையாக அதிகரித்துள்ள நிலையில் இதற்கான ஒப்புதல் விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அது மட்டுமல்லாமல், இந்தியாவில் ஏற்கனவே கேவாக்சின், கோவிUல்டு ஆகிய தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசி பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அடுத்தது ஜான்சன் அண்டு ஜான்சனுக்கு அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.