May 18, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

கோவிட் தொற்று பரவல் அதிகரிப்பு டிவிஎஸ் நிறுவனம் ரூ.40 கோடி நிதியுதவி

சென்னை, மே 8

நாட்டில் கோவிட் தொற்றின் 2ம் அலை பேரிடரால் நாளுக்கு நாள் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு அதிகரித்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், அண்டை நாடுகளும் இந்தியாவுக்கு உதவி கரம் நீட்டிக் கொண்டுள்ளன. பல்வேறு தனி நபர்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள், என்ஜிஓக்கள் என பலரும் இந்தியாவுக்காக உதவியை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் நாட்டின் முன்னணி வாகன நிறுவனமான டிவிஎஸ் நிறுவனமும் ரூ.40 கோடிக்கான கோவிட் உதவிகளை அறிவித்துள்ளது. இதில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், சுந்தரம் கி¼ளட்டன் மற்றும் டிவிஎஸ் குழுமத்தினை சேர்ந்த மற்ற குழும நிறுவனங்கள் என அனைத்தும் இணைந்து இந்த உதவிகளை செய்யப் போவதாக அறிவித்துள்ளன.

நிவாரண முயற்சிகளின் ஒரு பகுதியாக டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்களுக்கு 2000 ஆக்சிஜன் செறிவூட்டிகளை சப்ளை செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. அதோடு தமிழ் நாடு கர்நாடகா மற்றும் இமாச்சல பிரதேசத்தில் உள்ள அத்தியாவசிய சேவை ஊழியர்களுக்கு, ஒரு நாளைக்கு 20,000ம் உணவு பொட்டலங்களை வழங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மூன்று மாநிலங்களில் உள்ள 500க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் மற்றும் யஹல்த்கேர் செண்டர்களுக்கு, 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பேஸ் மாஸ்குகள், ஆயிரக்கணக்கான ஆக்சிமீட்டர்கள், பிபிஇ கிட், சானிடைசர்கள், அத்தியாவசிய மருந்துகள் என பலவும் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இது குறித்த அறிவிப்பில், டிவிஎஸ் நிறுவனம் சென்னையில் உள்ள இரண்டு பெரிய மருத்துவமனைகளாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மற்றும் ஸ்டான்லி பொது மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றுடன் இணைந்து மிக நெருக்கமாக பணியாற்றி வருவதாகவும் டிவிஎஸ் தெரிவித்துள்ளது.

Spread the love