புது தில்லி, ஏப்.21
கோவிட் தொற்று 2ம் அலை பேரிடரால், அமல்படுத்தப்பட்டு இரவு நேர மற்றும் பொது முடக்கத்தினால் பொருளாதார நடவடிக்கையில் பாதிப்பு ஏற்படுத்தியுள்ளதாக கிரிசில் நிறுவனம் தெரிவத்துள்ளது.
இந்தியாவில் தற்போது கொரோனா நோய் தொற்று பரவலின் இரண்டாவது அலை தீவிரம் அடைந்து வருவதால், இதனை தடுக்கும் பொருட்டு, பல்வேறு மாநிலங்களில் உள்ளூர் அளவிலான பொது முடக்கம் மற்றும் இரவு நேர ஊரடங்கு மாதிரியான விதிமுறைகள் அமல் படுத்தியுள்ளன.
பெரும்பாலான மாநிலங்களில் போக்குவரத்திலும் கட்டுப்பாடுகள் நிலவுகின்றன. இந்நிலையில் இந்த உள்ளூர் அளவிலான ஊரடங்கு, பொருளாதார நடவடிக்கைகளில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளது, இந்தியாவைச் சேர்ந்த தரநிலை – பகுப்பாய்வு நிறுவனமான கிரிசில் ஊரடங்கு நடைமுறை பல்வேறு மாநிலங்களில் அமலில் உள்ளதால் பொருளாதார நடவடிக்கைகளை கண்காணிக்க உதவும் பிரதான காரணிகளான மின் நுகர்வு மற்றும் ஜிஎஸ்டி இ-வே பில்களில் லேசான மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தற்காலிகமா அல்லது தொடருமா என்பது போக போகத்தான் தெரியும் என கிரிசில் தெரிவித்துள்ளது.