May 20, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

கோவிட் நிவாரணத்துக்கு அமெரிக்காவின் பங்களிப்பு இந்தியாவிற்கு உதவி ரூ.7500 கோடியை எட்டுகிறது

வாஷிங்டன், மே 20

நாட்டில் கோவிட் தொற்று சவாலை சமாளிக்க இந்தியாவுக்கு அமெரிக்கா அளிக்கும் உதவி இம்மாத இறுதிக்குள் ரூ.7500 கோடியை எட்டும் என செய்திகள் வெளிவந்துள்ளது.

அமெரிக்க அரசு இந்தியாவுக்கு ரூ.750 கோடி மதிப்பிலான ஆக்சிஜன் செறிவூட்டிகள் மருத்துவப் பொருட்களை அனுப்பியுள்ளது. அமெரிக்க கார்ப்பரேட் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் 25 ஆயிரம் ஆக்சிஜன் செறிவூட்டிகள் படுக்கைகள் மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றை அனுப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இவற்றை தவிர மைக்ரோசாப்ட் ஐ.பி.எம். உள்ளிட்ட நிறுவனங்களும் பல கோடி மதிப்பிலான மருத்துவப் பொருட்களை அனுப்பியுள்ளன. பில்கேட்ஸ்-மெலிந்தா அறக்கட்டளை சேவா இன்டர்நே­னல் போன்ற தொண்டு நிறுவனங்களும் தாராளமாக உதவி வருகின்றன. அமெரிக்காவில் ஆளும் ஜனநாயக கட்சி குடியரசு கட்சி ஆகியவை இந்தியாவுக்கு கூடுதலாக மருத்துவப் பொருட்களை அனுப்ப மேலும் நிதி ஒதுக்க வேண்டும் என கோரியுள்ளன.

அமெரிக்க மக்கள் ஆப்ரிக்க அமெரிக்கர்கள் ஹிஸ்பானியர் இந்திய வம்வசாவளியினர் என அனைத்து தரப்பினரும் நிதி திரட்டி ஏராளமான மருத்துவப் பொருட்களை இந்தியாவுக்கு வழங்கி வருகின்றனர். அமெரிக்க வரலாற்றில் அனைத்து கட்சியினரும் மக்களும் இதுபோல ஒருங்கிணைந்து வேறு எந்த நாட்டிற்கும் உதவி செய்ததில்லை என தெரிவிக்கப்படுகிறது. இம்மாத இறுதிக்குள் அமெரிக்க உதவி ரூ.7500 கோடியை எட்டும் என செய்திகள் வெளியாகியுள்ளது.

Spread the love