May 17, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

கோவிட் பரவல் அதிகரிப்பால் மாருதி சுசூகி ஆலை தற்காலிகமாக மூடல்

புது தில்லி, மே 10

நாட்டில் கோவிட் தொற்று பரவல் அதிகரிப்பால் மாக மாருதி சுசூகி ஆலை வரும் 16-ம் தேதி வரை மூடப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: கோவிட் இரண்டாவது அலை காரணமாக நாடு முழுவதும் பகுதியளவு ஊரடங்கு, முழு ஊரடங்கு உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
இந் நிலையில், கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் கார் உற்பத்தி கடுமையாக பாதிக்கத் துவங்கி இருக்கிறது. கோவிட் பரவலால் பல இடங்களில் கார் விற்பனை முடங்கி உள்ளதையடுத்து, இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி நிறுவனம், கார் உற்பத்தியை பெருமளவு குறைத்துள்ளது.

கோவிட் நோயாளிகளுக்கு தேவைப்படும் ஆக்சிஜனை வழங்கும் வகையில், தொழிற்சாலைகளில் கார் உற்பத்தியை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளதாக சில தினங்களுக்கு முன் அந்நிறுவனத்தின் தலைவர் ஆர்.சி.பர்கவா அறிவித்தார். இதனையயாட்டி ஆலையை மே 1 முதல் 9-ம் தேதி வரை தற்காலிகமாக மூட முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் கோவிட் பரவலின் நிலைமை சீரடையாததால் ஆலை மூடல் வரும் 16-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாருதி சுசூகி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Spread the love