August 5, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

கோவிட் பரிசோதனை கட்டணம் தமிழக அரசு குறைத்தது

சென்னை, மே 20

தமிழகத்தில் கோவிட் பரிசோதனை கட்டணம் தமிழக அரசு குறைத்துள்ளதாக தெரிவித்துள்ளது

தமிழக சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தமிழகத்தில் தனியார் ஆய்வகங்களில் கோவிட் பரிசோதனை செய்வதற்கான கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, தனியார் ஆய்வகங்களில் முதலமைச்சரின் காப்பீடு திட்டத்தில் கொரோனா பரிசோதனை செய்வதற்கான கட்டணம் ரூ.800-ல் இருந்து ரூ.550 ஆகவும், தனியார் ஆய்வகங்களில் முதலமைச்சரின் காப்பீடு திட்டத்தில் குழு மாதிரிகளுக்கான கட்டணம் ரூ.600-ல் இருந்து ரூ.400-ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.

மேலும், தனியார் ஆய்வகங்களில் காப்பீடு பயனாளிகளாக இல்லாதவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டணமான ரூ.1200-ல் இருந்து ரூ.900 ஆக குறைப்பு. வீடுகளுக்கு நேரடியாக சென்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ள கூடுதலாக ரூ.300 செலுத்த வேண்டும். இவ்வாறு அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love