January 24, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

கோவிட் 3ம் அலையைத் தவிர்ப்பது கடினம் விஞ்ஞான ஆலோசகர் தகவல்

புது தில்லி, மே 6

இந்தியாவில் கோவிட்டின் 3வது அலையைத் தவிர்ப்பது கடினம் என மத்திய அரசின் முதன்மை விஞ்ஞான ஆலோசகர் விஜயராகவன் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாயுள்ளது.

இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

பல்வேறு மாநிலங்களில் கோவிட் பரவல் நாளுக்கு நாள் அதிகரிக்கும் நிலையில், 3ம் அலையும் தொடர வாய்ப்பு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதனை தவிர்ப்பது கடினம் எனத் தெரிவித்துள்ள விஜயராகவன், 3ம் ஆலையை எதிர்கொள்ள மக்கள் தயாராக இருக்க வேண்டுமென எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் லவ் அகர்வால், சென்னையில் கோவிட் பாதிப்பு அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தின் பெங்களூரு, ஹரியானா மாநிலத்தின் குருகிராம் ஆகிய இடங்களிலும் தொற்று தீவிரத்துடன் பரவுவதாக தெரிவித்துள்ளார்.

Spread the love