October 17, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

கோவில் வீரகுடி கிராமத்தில் தூய்மை பாரதம் நிகழ்ச்சி

புதுக்கோட்டை, அக்.7

புதுக்கோட்டை மாவட்டம், வம்பன் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் சார்பில் குன்னாண்டார் கோவில் வட்டம் கோவில் வீரகுடி கிராமத்தில் தேசீய அளவிலான தூய்மை பாரதம் நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது. வீட்டைச் சுத்தமாக வைத்துக் கொள்ளுதல், ஊட்டச்சத்து தோட்டம் அமைத்தல் மற்றும் அதன் முக்கியத்துவம், வீடு மற்றும் பண்ணை கழிவுகளை மறு சுழற்சி செய்து பயன்படுத்துதல், மண், நீர், காற்று மற்றும் இதர இயற்கை வளங்களை பாதுகாத்தல் மற்றும் பராமரித்தல், வருமானத்தை அதிகரிப்பதற்கு தரமான பண்ணை இடுபொருட்கள் தயாரித்தல், கொரானா காலத்தில் கடைபிடிக்க வேண்டீய தூய்மை ஆகிய தொழில் நுட்ப கருத்துக்களை வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் முனைவர் செ.ஜேசுப்பிரியா பூர்ண கலா, தொழில் நுட்ப வல்லுநர் (உணவியல்), முனைவர் க.தனலெட்சுமி, தொழில் நுட்ப வல்லுநர் (தோட்டக்கலை), முனைவர் அ.ப.சிவமுருகன், தொழில் நுட்ப வல்லுநர் (உழவியல்), முனைவர் த.செந்தில் குமார், தொழில் நுட்ப வல்லுநர் (நூற்புழுவியல்), முனைவர் ப.சாந்தி, தொழில் நுட்ப வல்லுநர் (பயிர் மரபியல் மற்றும் இனபெருக்கவியல்) ஆகியோர் வழங்கினர். கலந்து கொண்ட 50 விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய தலைவர், குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் நித்யவதி, குன்னாண்டார் கோவில் வட்டம் பங்கு பெற்று சிறப்புரை வழங்கினர். பயிற்சியின் நிறைவாக கலந்து கொண்ட அனைவருக்கும் முனைவர் செ.ஜேசுப்பிரியா நன்றி கூறினார்.

Spread the love