July 24, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

கோவிஷீல்ட் தயாரித்து வழங்குவதற்காக சீரம் நிறுவனத்துக்கு ரூ.1,732.50 கோடி மத்திய அரசு வழங்குகிறது

புது தில்லி, மே 4

சீரம் நிறுவனம் 11 கோடி கோவிஷீல்ட் தடுப்பூசிகளை தயாரித்து வழங்குவதற்காக ரூ.1,732.50 கோடியை வழங்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:

மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் 11 கோடி கோவிஷீல்ட் தடுப்பூசிகளை தயாரித்து வழங்க அந்த நிறுவனத்துக்கு மத்திய அரசு ரூ.1,732.50 கோடியை விடுவித்துள்ளது.

மூலவரி பிடித்தம் போக ரூ.1,699.50 கோடியை சீரம் நிறுவனம் ஏப்ரல் 28-ஆம் தேதியன்று பெற்றுக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி இறுதியாக 10 கோடி கோவிUல்ட் தடுப்பூசிகளை தயாரித்து வழங்க கேட்டுக் கொள்ளப்பட்ட நிலையில் மே 3ம் தேதி வரையில் 8.744 கோடி தடுப்பூசிகளை சீரம் நிறுவனம் விநியோகித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இதுதவிர, 5 கோடி கோவேக்ஸின் தடுப்பூசிகளை பாரத் பயோடெக் நிறுவனத்திடமிருந்து பெறுவதற்காக அந்த நிறுவனத்துக்கு முன்பணமாக ரூ.787.50 கோடியை மத்திய அரசு ஏப்ரல் 28-ஆம் தேதி விடுவித்துள்ளது. இறுதியாக 2 கோடி தடுப்பூசிகளை பெற அந்த நிறுவனத்திடம் ஆர்டர் கொடுக்கப்பட்டு மே 3 வரையில் 0.8813 கோடி தடுப்பூசிகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

மே 2ம் தேதி நிலவரப்படி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இலவசமாக 15.54 கோடி தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இன்னும், மாநிலங்களிடம் 78 லட்சத்துக்கும் அதிகமான தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. அடுத்த 3 நாள்களில் மேலும் 56 லட்சம் கோவிட் தடுப்பூசிகள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளன என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Spread the love