October 17, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

கோவையில் பூக்கள், பழங்கள் விலை உயர்வு

கோவை, அக்.13

ஆயுத பூஜை முன்னிட்டு தொழில் நிறுவனங்களில் எந்திரங்களுக்கு பூஜை செய்வது வழக்கம். மேலும் பொதுமக்களும் தங்ளது வீடுகளிலும் பூக்கள், பழங்கள், வாழை கன்றுகள், பொரி, சுண்டல் உள்ளிட்ட பொருட்களை வைத்து பூஜை செய்து சாமி கும்பிடுவார்கள்.

இதையடுத்து நேற்று கோவையில் உள்ள பூ மார்க்கெட், கடைவீதிகளில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. அங்கு அவர்கள் சாமி கும்பிட தேவையான பூ, பழம், பொரி, வாழை இலை, உள்ளிட்ட பொருட்களை வாங்கி சென்றனர். எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாகவே காணப்பட்டது. இதனால் முக்கிய வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தொடர் மழையால் பூக்கள் வரத்து குறைந்ததால் பூக்களின் விலை அதிகரித்துள்ளது. கடந்த வாரம் கிலோ ரூ.500க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லிகை பூ நேற்று ரூ.1,200க்கு விற்பனை செய்யப்பட்டது.

ரூ.400க்கு விற்பனை செய்யப்பட்ட ஜாதி மற்றும் முல்லை ரூ.720க்கும், செவ்வந்திப்பூ ரூ.200க்கும், அரளி ரூ400க்கும், கோழிக்கொண்டை ரூ.100க்கும், சம்பங்கி ரூ.320, முல்லை ரூ.800, வாடாமல்லி ரூ.100, ரோஜா ரூ.320, தாமரை ஒரு பூ ரூ.50, மரிக்கொழுந்து ஒரு கட்டு ரூ.40, துளசி ஒரு கிலோ ரூ.50 விற்பனை செய்யப்பட்டது.

பழங்களை பொறுத்தமட்டில், ஆப்பிள் ரூ.160, மாதுளை ரூ.180, சாத்துக்குடி ரூ.80, கொய்யா ரூ.100 என விற்பனையானது. பூவன் பழம் ரூ.40க்கும், செவ்வாழை தார் ரூ.800க்கும், கற்பூரவள்ளி தார் ரூ.600க்கும் விற்பனையானது.

Spread the love