August 15, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

கோவையில் 3.42 லட்சம் கிலோ தேயிலை ஏலம்

கோவை, ஏப்.22

கோவையில் 3.42 லட்சம் கிலோ தேயிலை ஏலம் போனது.

கோவை மாவட்டம், கோவை தேயிலை ஏல மையத்தில், வாரந்தோறும் இணையதள வாயிலாக, தேயிலை ஏலம் நடக்கிறது. இதில், சர்வதேச அளவில் உள்ள தேயிலைத் தூள் ஏலதாரர்கள்

பங்கேற்பர். இவ்வாரம் நடந்த தேயிலைத்தூள் ஏலத்தில், 2 லட்சத்து 95 ஆயிரத்து 537 கிலோ வரத்து இருந்தது. இதில், ஒரு லட்சத்து, 96 ஆயிரத்து, 668 கிலோ தேயிலை தூள் ஏலம் போனது. இது,

65 சதவீதமாகும். தேயிலைத்தூளின் இவ்வார சராசரி ஏல மதிப்பு, ஒரு கிலோவுக்கு, ரூ.128.19 காசுகளாக இருந்தது. இலை ரக தேயிலை, 2 லட்சத்து 25 ஆயிரத்து 871 கிலோ ஏலத்துக்கு வந்தது.

இதில், ஒரு லட்சத்து, 45 ஆயிரத்து, 464 கிலோ ஏலம் போனது. இது, 64 சதவீதம் ஆகும். இலை ரக தேயிலையின், இவ் வார சராசரி ஏல மதிப்பு ஒரு கிலோவுக்கு, ரூ.115.68 காசுகளாக இருந்தது.

இதனை, கோவை தேயிலை ஏல மைய செயலாளர் ஸ்ரீகுமார் தெரிவித்துள்ளார்.

Spread the love