September 21, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

கோவை கொடி

செப்.13
கோவை கொடி தோல் கிருமிகள் நீங்க, தோலில் ஏற்படும் சொறி, சிரங்கு இவற்றைக் குணப்படுத்தவும், தோலில் ஏற்படும் அலர்ஜியைத் தடுக்கவும், கோவை இலை பயன்படுகிறது. இலை, மஞ்சள் தூள், சிறியா நங்கை, வேப்பிலை சம அளவு எடுத்து ஒன்றாக சேர்த்து அரைத்து சிறிது நீர் கலந்து மண்சட்டியில் விட்டு நன்றாக காய்ச்சி ஆறிய பின் உடலெங்கும் பூசி ஊறவைத்து பின் குளித்து வந்தால் சொறி, சிரங்கு குணமாகும். ரத்தம் சுத்தமடைய, காற்று, நீர் இவற்றின் மாசடைந்த தன்மையாலும் அவசர உணவுகளாலும் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைப்பதில்லை. இரத்தத்தில் இரும்புச் சத்து குறைபாடு ஏற்படுகிறது. மேலும் பித்த அதிகரிப்பு காரணமாக இரத்தம் அசுத்தமடைகிறது. இதனால் சிறுநீர் கோளாறு ஏற்படுகிறது, ரத்தசோகை நோய் உருவாகிறது. இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து தினமும் ஒரு ஸ்பூன் அளவு தேனில் கலந்து உட்கொண்டால் ரத்தம் சுத்தமடையும், உடலும் புத்துணர்ச்சி பெறும். உடல்சூடு சமநிலையில் இருக்க இலையில் கசாயம் செய்து அருந்தி வந்தால் உடல் வெப்பம் சீராக இருக்கும். கண்கள் குளிர்ச்சிபெறும்.

நன்றி ASN சாமி அங்கக ஒருங்கிணைந்த விவசாய பண்ணை மற்றும் மூலிகை பண்ணை, ஆதனூர். 94423 11505.

Spread the love