கோவை, ஜூலை 8
கோயம்புத்தூர் மாவட்டத்தில் தேசிய உணவு பாதுக்காப்பு இயக்கத்தின் கீழ் 2022-2023 ம் ஆண்டுக்கு பயறு வகை பயிர்களின் உற்பத்தியை அதிகரிக்க ரூ.29.95 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இம்மாவட்டத்திற்க்கு பயறுவகை பயிர்க்கு தேவையான உயிர் உரங்கள் 700 எக்டர்க்கும், நுண்ணூட்டக் கலவையும் 450 எக்டர்க்கும், பயிர் பாதுகாப்பு மருந்து விநியோகம் செய்ய பின்னேற்பு மானியமாக 200 எக்டர்க்கும் 50% மானியத்தில் வழங்கப்பட உள்ளது. தற்போது பயறு வகை பயிர்களின் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு சுழல்கலப்பை விநியோகம் ஒன்றுக்கு ரூ.34,000/- அல்லது 50% மானியத்தில் மொத்தம் 3 எண்களும், சிறு, குறு / பெண் / ஆதி திராவிடர் / மலைவாழ்மக்கள் விவசாயிகளுக்கு ரூ.42,000/ அல்லது 50% மானியத்தில் மொத்தம் 8 எண்களும், பேட்டரியில் இயங்கும் விசைத்தெளிப்பான் விநியோகத்திக்கு ஒன்றுக்கு ரூ.3,000/- அல்லது 50% மானியத்திலும் மொத்தம் 35 எண்களும், சிறு, குறு / பெண் / ஆதி திராவிடர் / மலை வாழ்மக்கள் விவசாயிகளுக்கு ரூ.3,800/- அல்லது 50% மானியத்தில் மொத்தம் 75 எண்களும், பின்னேற்பு மானியமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.