கோவை வேளாண்மை ஆராய்ச்சி நிலைய வல்லுநர் விதை உற்பத்தி திடலில் கண்காணிப்புக்குழு ஆய்வு
கோவை, மே 6
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் வேளாண்மை ஆராய்ச்சி நிலையங்களில் ஒவ்வொரு ஆண்டும் உயர் விளைச்சல் தரும் பயிர் இரகங்களைக் கண்டறிந்து வெளியிட்டு வருகின்றது. அவ்வாறு வெளியிடப்பட்ட உயர் விளைச்சல் இரகங்களின் கருவிதைகளைக் கொண்டு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி நிலையங்களில் விதைப்பண்ணை அமைத்து வல்லுநர் விதை உற்பத்தி செய்து மாநில அரசு விதைப் பண்ணைகளுக்கு விதைபெருக்கத்திற்காகவும் விவசாயிகளுக்கு சாகுபடிக்காகவும் வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அமைக்கப்படும் விதைப்பண்ணைகளை ஆய்வு செய்து வயல் ஆய்வு தரத்தினை துல்லியமாக கடைபிடித்து தரமான விதைகளை உற்பத்தி செய்வதை உறுதி செய்திடும் பொருட்டு வல்லுநர் விதை உற்பாத்தி கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டு இக்குழுவானது விதைப் பூப்பருவம், அறுவடைப் பருவம் மற்றும் விதைக்குவியல் விதை சுத்தி ஆகிய நிலைகளில் ஆய்வு செய்து விதைத்தரத்தினை குறிப்பாக இனத்தூய்மை உறுதி செய்கின்றது.
இந்நிலையில் நடப்பு பருவத்தில் கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியில் உள்ள சோளம் ஊடீ32 , மக்காசோளம் ருஆஐ 1200, ருஆஐ 1201, கம்பு ஊடீ10 இரகங்களில் விதைப்பூப்பருவம் மற்றும் விதை சுத்தி பருவத்தில் உள்ளது. கோவை வேளாண்மை பல்கலைக்கழகம் பயறு வகைகள் துறை (னுநயீயசவஅநவே டிக யீரடளநள) பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் ரவிக்கேசவன், பேராசிரியர் முனைவர் ஜய்யனார், பேராசிரியர் முனைவர் கவிதாமணி மற்றும் கோவை விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் சை.நர்கீஸ் மற்றும் துடியலூர் விதைச்சான்று அலுவலர் சிலம்பரசன் ஆகியோர் அடங்கிய வல்லுநர் விதை உற்பத்தி கண்காணிப்புக்குழு ஆய்வு செய்தது. ஆய்வின் போது விதைப்பயிர் நடவுமுறை, விதைப்பயிரில் பிற இரக கலவன்கள், பயிர் விலகுதூரம் குறிவிக்கப்பட்ட நோய்கள் போன்றவற்றையும் ஆய்வு செய்தனர். மேலும் தரமான வல்லுநர் விதைகளை உற்பத்தி செய்திட தேவையான அனைத்து நடைமுறைகளையும் கடைபிடிக்க களப்பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.