October 17, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை ரூ.250 லட்சம் இலக்கு நிர்ணயம்: ஆட்சியர் தகவல்

மதுரை, அக்.13

மதுரை மாவட்டம், கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில், 2021-ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகை சிறப்பு விற்பனையினை வெங்கலக்கடைத் தெருவில் அமைந்துள்ள கோ-ஆப்டெக்ஸ் அங்கயற்கண்ணி ஏ.சி. பட்டு மாளிகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், குத்து விளக்கேற்றி முதல் விற்பனையை துவக்கி வைத்து தெரிவித்ததாவது:-

கைத்தறி ரகங்களின் விற்பனையை அதிகரிக்க தமிழக அரசு ஆண்டு தோறும், பண்டிகை காலங்களில் 30 சதவீதம் சிறப்புத் தள்ளுபடி வழங்கி வருகிறது. எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டு பருத்தி கைத்தறி ரகங்களுக்கு 30 சதவீதம் சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுகிறது. பண்டிகையை முன்னிட்டு பல வண்ணங்களில் வாடிக்கையாளர்களைக் கவரும் வண்ணம் பலவித வடிவமைப்புகளில் மென் பட்டு சேலைகள், பருத்தி சேலைகள் ,படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள் மற்றும் நவீன காலத்திற்கு உகந்தமான இரகங்கள் தீபாவளி பண்டிகைக்காக தருவிக்கப் பட்டுள்ளது.

மேலும், பாரம்பரிய ரகங்களை புதுப்பிக்கும் விதமாக, செட்டிநாடு சேலைகள் கைத்தறி சுங்கடி சேலைகள் நவக்கிரஉறா காட்டன் சேலைகள் மதுரை மற்றும் தஞகாவூர் காட்டன் சேலைகள் பரமக்குடி 1000 புட்டா சேலைகள் ஏற்றுமதி இரகங்கள் ஆகியவை பண்டிகைக்காக தருவிக்கப்பட்டுள்ளன. மேலும், நவீன யுக ஆடவர்களை கவரும் விதமாக பருத்தி சட்டைகள், தூய பருத்தி சட்டைகள் பாலிகாட்டன் சட்டைகள், நைட்டிகள் மற்றும் குர்தீஸ் இரகங்கள் கண்ணைக் கவரும் வண்ணங்களில் வாடிக்கையாளர்களுக்காக தருவிக்கப் பட்டுள்ளது.

கோ-ஆப்டெக்ஸ் ஜவுளி இரகங்களை மின் வணிக வலைதளமான -என்ற இணைய தளத்தின் மூலமாகவும் பெற்றுக் கொள்ளலாம். மதுரை மண்டலத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் 17 விற்பனை நிலையங்களின் மூலம் 2021-2022ம் ஆண்டிற்கு விற்பனை குறியீடாக 2000 லட்சங்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள நான்கு விற்பனை நிலையங்களின் விற்பனை குறியீடாக முறையே 670 லட்சங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அங்கயற்கண்ணி விற்பனை நிலையத்தில் சென்ற ஆண்டு தீபாவளி விற்பனை 120.87 லட்சங்கள் ஆகும். நடப்பு ஆண்டு 2021-2022-ல் விற்பனை குறியீடாக ரூ.250.00 லட்சங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Spread the love