திருநெல்வேலி, மார்ச் 31
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், கௌதமபுரி கிராமத்தில், தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூரில் உள்ள எஸ்.தங்கப்பழம் வேளாண்மை கல்லூரியில் இறுதி ஆண்டு பயிலும் மாணவி மா அனுசியா ஊரக வேளாண் அனுபவத் திட்டத்தின் கீழ் கௌதமபுரி கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் குறித்த செயல் விளக்கத்தைச் செய்து காண்பித்தார். மேலும் அதை பயன்படுத்துவதன் மூலம் ஏற்படும் நன்மைகளையும் அதன் பயன்களையும் எடுத்துரைத்தார். மண்புழு உரம் பயன்படுத்துவதால் குறைந்த செலவில் நல்ல விளைச்சலும் அதிக மகசூலும் பெற்றிடலாம் மற்றும் மண்ணின் சத்துக்களையும் வளத்தையும் பாதுகாத்திடலாம். இதில் அபிசாகு, அமல் சினேகா, மௌலிகா, சின்சி ஜோசப், பிரதிக்ஷா, கிருத்திகா ஆர்த்ரா, சந்திரா, சாரதி, கலைச்செல்வி, அமலா ஜோசி ஆகியோர் கலந்து கொண்டனர். கௌதமுபுரியைச் சார்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.
Spread the love