June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

சத்துமிகுந்த அத்திப்பழத்தை அலட்சியப்படுத்த வேண்டாம்

இன்று நவீன உலகில் பலருக்கும் உடல்நலம் பேணும் அக்கறை வந்துள்ளது வரவேற்கத்தக்கது. குறிப்பாக சர்க்கரை வியாதி, தோல் வியாதி, இரும்புசத்து பற்றாக்குறை போன்றவை எல்லா இடத்திலும் மலிந்து கிடக்கும் பாதிப்புகள். அந்த சிகிச்சைக்கு பல பழங்கள் உதவினாலும் அத்தியின் பங்கு மிக சிறந்தது. குறிப்பாக தாது உப்புகள், கால்சியம் சத்து அத்தியில் குறிப்பிடத்தக்க அளவு உள்ளது.

100 கிராம் அத்தி பழத்தில் உள்ள சத்துக்கள், நார்சத்து-1.6 கி, பொட்டாசியம்-6.6 கி, கால்சியம்-200 மி.கி, இரும்பு-4 மி.கி மற்றும் மாங்கனீஸ்-6 கி ஆகும். வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் பி, வைட்டமின் கே, மெக்னீசியம், காப்பர், ஜிங்க் உள்ளிட்ட பல்வேறு சத்துகள் நிறைந்துள்ளன. மற்ற பழங்களைவிட அத்திபழத்தில் 2 முதல் 4 மடங்கு வரை தாது உப்புகளும், அதிக அளவில் கால்சியமும் உள்ளது. சாறாக்கி குடித்தாலும், நேரடியாக பழமாக அல்லது உலர்ந்தனவற்றை பயன்படுத்தினாலும் இதிலுள்ள சத்துகளின் அளவுகளில் மாற்றம் ஏதுமில்லை. இரும்பு சத்து நிறைந்துள்ளதால், ஹீமோகுளோபின் அளவு உயரும். குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு அத்திவேர், தாய்பால் நன்றாகச் சுருக்க செய்யும். வெள்ளைப்படுதல், மேகநோய், பெரும்பாடு பிரச்சனை கட்டுப்படும். வாயில் உள்ள கிருமிகள் அளிக்கப்பட்டு துர்நாற்றம் நீங்கும். கெட்ட கொழுப்பை கரையசெய்து உடல் எடை குறைய உதவுகின்றன. சிறுநீரகத்தில் கல்லடைப்பு போன்ற தடங்கல்களை அகற்றி சிறுநீரை பெருக்குகிறது. தாது விருத்தியாக்கி, ஆண்மலடு நீக்கும். கல்லீரல் வீக்கத்தை குணமாக்கும். நார்சத்து, மலச்சிக்கல் பிரச்சனைகளை தீர்க்கும். இன்சுலின் செயல்பாட்டை சிறப்பாக மேம்படுத்தி இரத்தத்தின் சர்க்கரை அளவை பராமரிக்கும்.

எக்சிமா, சேடாரியாசிஸ், தோலில் ஏற்படும் வெண் புள்ளிகள், வெண்குஷ்டம் குணமாகும். ஆன்டிஆக்ஸிடென்டுகள் உடலில் உள்ள கழிவுகளை அகற்ற பெரிதும் உதவுகின்றன. ட்ரிப்டோபன், விட்டமின் பி, சி, தூக்கமின்மை பிரச்சனை தீரும். உடலின் அசுத்தங்கள் நீக்கும். அலர்ஜி குணமாகும். உடலின் நீர்சத்தின் அளவினை சீராக்கும். பொட்டாசியம் இரத்தத்தை சுத்திகரித்து, இரத்த ஓட்டம் சீராக நடைபெற்று இதயம் சீராக செயல்பட உதவும். ஜிங்க் சத்து முடியில் ஏற்பட்டுள்ள பிளவுகளை குணப்படுத்த உதவும்.

குறிப்பாக மெனோபாஸ் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் அதிகமான முடிஇழப்பினை தடுக்கும். வைட்டமின் சி, வைட்டமின் ஏ, மெக்னீசியம் சத்து தலைமுடியின் வளர்ச்சியை அதிகப்படுத்தும். கல்லீரல் வீக்கம் குணமாகும். செடி மற்றும் மரத்தின் இலைகளை பொடியாக்கி, தேனில் கலந்து சாப்பிட்டு வர பித்தம் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளும் குணமடையும். புற்றுநோய் தாக்கும் அபாயம், குறிப்பாக பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவதை தடுக்கும். வைட்டமின் ஏ, நிக்கோடினிக் அமிலம் மற்றும் அஸ்கார்பின் அமிலம் கண்களின் நரம்புகளுக்கு பலமளித்து, கண் பார்வை பலப்படுத்தும். கால்சியம் சத்து, எலும்புகளை பலப்படுத்தும். மூட்டுவலி, எலும்பு தேய்மானம் போன்ற பல்வேறு பிரச்சனைகள் குணமடையும். உடல் வீக்கம் குறையும். நீர் கட்டிகள், வாய்புண், ஆஸ்த்துமா பிரச்சனை, உடல் சோர்வு தீரும். வலிப்பு நோய், மூலநோய் குணமாகும். எண்ணற்ற மருத்துவ குணங்களை ஒருங்கே கொண்டுள்ள அத்தி, விளைவித்தல், பராமரிப்பு மற்றும் அறுவடை வரை எவ்வித சிரமத்தையும் தராமல், நிரந்தர வருமானத்தினை பெற்று விளைவிக்கும் விவசாயிகள் வளமுடன் வாழலாம்.

மேலும் விபரம் பெற 98420 01725 உள்ளது.

டாக்டர்.பா.இளங்கோவன்.
பேராசிரியர் மற்றும் வேளாண்மை இணை இயக்குநர்

பாசன மேலாண்மை பயிற்சி நிலையம், துவாக்குடி, திருச்சி-15

Spread the love