சேலம், மே 31
சேலம் மாவட்டம், சந்தியூர் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் பிரதம மந்திரியின் பல்வேறு நலத் திட்டங்களின் பயனாளிகள் உடன் விஞ்ஞானிகள் கலந்துரையாடல் நிகழ்வு நலிந்தோர் நல்வாழ்வு மாநாடு என்ற தலைப்பில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பாரத பிரதமர் நரேந்திர மோடி, விவசாயிகளுக்கு வருடம் தோறும் ரூ.6000 வழங்கும் திட்டத்தின் 11-வது தவணையாக ரூ.21,000 கோடி வழங்கும் நிகழ்வினை தொடங்கி வைத்து நாட்டு மக்களுக்கு காணொளி காட்சி மூலம் உரையாற்றினார். இந்நிகழ்வின் போது வேளாண்மை அறிவியல் நிலையத்தின் விஞ்ஞானிகள் விவசாயிகள் மற்றும் பயனாளிகள் உடன் கலந்துரையாடி அவர்களுடைய சந்தேகங்களுக்கு தக்க தீர்வினை அளித்தனர். மேலும் புதிய ரகங்கள், பயிர் வளர்ச்சி ஊக்கிகள், நானோ யூரியா மற்றும் நிலம் மூடாக்குகள், குழித்தட்டு நாற்றுக்கள், தட்டுகள் பற்றிய கருத்து கட்சிகள் அமைக்கப்பட்டது. இந்நிகழ்வில் 562 பயனாளிகள் மற்றும் பல்வேறு துறைகளின் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Spread the love