கள்ளக்குறிச்சி, ஏப்.29
கள்ளக்குறிச்சியில் நடந்த பருத்தி வார சந்தையில் ரூ.10.83 லட்சத்துக்கு பஞ்சு மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டது.
கள்ளக்குறிச்சி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் புதன்கிழமைகளில் பருத்தி வார சந்தை நடக்கிறது. கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய மூன்று மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள், தங்களது விளைநிலங்களில் அறுவடை செய்த பஞ்சினை விற்பனைக்காக இங்கு கொண்டு வருவர். திருப்பூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வெளிமாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டு, பஞ்சின் தரத்திற்கேற்ப விலை நிர்ணயம் செய்கின்றனர். சந்தையில் 138 விவசாயிகள் 595 பஞ்சு மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர். எல்.ஆர்.ஏ., ரக பஞ்சு மூட்டைகள் மட்டுமே வந்தது. ஸ்வின், கொட்டு ரக பஞ்சு மூட்டைகள் வரத்து முற்றிலும் இல்லை. எல்.ஆர்.ஏ., ரக பஞ்சு ஒரு மூட்டை அதிகபட்சம் ரூ.6,666க்கும், குறைந்தபட்சம் ரூ.4,605க்கும் விலை போனது. மொத்தமாக 10 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது.