கண்காட்சியை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்
அரியலூர், ஜூலை 14
அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டாரம், சன்னாசிநல்லூர், வருவாய் கிராமத்தில் மாவட்ட ஆட்சித் தலைவரின் மக்கள் குறைதீர்க்கும் முகாம் 12.07.2022 அன்று நடைபெற்றது. மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்ற முகாமில் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக வேளாண்மை இணை இயக்குநர், கலந்து கொண்டு வேளாண்மைத் துறை மூலம் வைக்கப்பட்ட கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் மற்றும் விவசாயிகள் பார்வையிட்டு தொழில் நுட்பங்களை தெரிந்து கொண்டனர்.
விழாவில் அரியலூர், வேளாண்மை இணை இயக்குநர் பேசுகையில் விவசாயிகள் அணைவரும் மண் பரிசோதனை செய்து மண் பரிசோதனை முடிவுகளின்படி உரமிடவும், கோடை உழவு செய்து நீர் பிடிப்பு தன்மையை அதிகரிக்கவும் சம்பா பருவத்திற்கு உண்டான ஊசு-1009(ளரடி), ஊழு-சு-50 நிலக்கடலை விதைகள், உளுந்து விதைகள், கேழ்வரகு விதைகள் மானிய விலையில் செந்துறை வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருப்பு வைத்து விநியோகம் செய்யப்பட்டு வருகிறது மற்றும் மானிய விலையில் உயிர் உரம், நுண்சத்து வழங்கப்படுகிறது எனவும் மற்றும் பாரத பிரதமரின் விவசாயிகளுக்கான கௌரவ நிதியுதவி திட்டத்தை பயனாளிகள் செய்ய வேண்டிய திருத்தங்கள் பற்றியும் எடுத்துரைத்தார். வேளாண்மைத் துறையின் மூலம் 5 விவசாயிகளுக்கு இடுபொருட்கள் மாவட்ட ஆட்சியர் அவர்களால் வழங்கப்பட்டது. மக்கள் தொடர்பு முகாமில் செந்துறை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர், துணை வேளாண்மை அலவலர், உதவி வேளாண்மை அலுவர்கள், அட்மா திட்ட உதவி தொழில் நுட்ப மேலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Spread the love