September 21, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

சமூக நலத்திட்ட சேவைகளைத் தாங்களே இணையத்தில் பதிவேற்றம் செய்து பயன்பெறலாம்: ஆட்சியர்

விருதுநகர், செப்.9

பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான 20 வருவாய்த்துறை சான்றுகள் மற்றும் 6 சமூக நலத்திட்ட சேவைகளைத் தாங்களே https://www.tnesevai.tn.gov.in/Citizen/ என்ற இணையதள முகவரியில் தங்களைப் பதிவு செய்து தங்களுக்கான பயனர் பெயர் பெற்ற பின்னர் விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்யலாம். இதற்கான வழிமுறைகள் https://www.tnesevai.tn.gov.in/VideoTutorial.html மற்றும் https://www.tnesevai.tn.gov.in/UserManual.html ஆகிய இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.

விருதுநகர் மாவட்டத்தில் இயங்கிவரும் பல தனியார் கணினி மையங்கள் பொது மக்களுக்கான Citizen Login ஐ தவறாக பயன்படுத்துகின்றனர். அவ்வாறு ஊவைணை CAN Number ஐ பயன்படுத்தும்பொழுது அந்த பயனருக்குத் தொடர்பற்ற மற்ற நபர்களின்CAN Number அந்தப் பயனரின் யூசர் நேமில் அவரது அனுமதியின்றி உருவாக்கப்படுகிறது. அவ்வாறு விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பங்களை அலுவலர்கள் தேவையின் அடிப்படையில் Return to Applicant அனுப்பி அவ்விண்ணப்பங்களின்மேல் நடவடிக்கை எடுக்க இயலாமல் பொதுமக்கள் அவதியுறும் நிலை ஏற்படுகிறது. மேலும் அவ்வாறு விண்ணப்பிக்கப்படும் சான்றுகளில் எழுத்துப்பிழை தேவையான ஆதாரங்களை இணைக்கத் தவறுதல் மற்றும் இடைத்தரகர்கள் மூலமாக அதிக கட்டணம் வசூலித்தல் போன்ற முறைகேடுகள் தொடர்பான புகார்கள் வருகிறது.

எனவே தனியார் கணினி மையங்கள் Citizen Login ஐ தவறாக பயன்படுத்துதல் கூடாது என இதன்மூலம் தெரிவிக்கப்படுகிறது. மேலும் பொது மக்கள் இடைத்தரகர்களைத் தவிர்த்து அருகிலுள்ள வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் யூனியன் அலுவலகங்களிலுள்ள பொது சேவை மையங்கள் மற்றும் அரசு அனுமதி பெற்று இயங்கும் தனியார் பொது சேவை மையங்களை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அனைத்து வருவாய்த்துறை சான்றிதழ்கள் மற்றும் பட்டாமாறுதல் விண்ணப்பங்களுக்கு ரூ.60/- சமூகநலத்துறை தொடர்பான சேவைகளுக்கு ரூ. 120/- மற்றும் சமூக நலத்திட்ட சேவைகளுக்கு ரூ. 10/- மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்பட வேண்டும். அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால் tnesevaihelpdesk@tn.gov.in என்ற மின்னஞ்சல் அல்லது கட்டணமில்லா தொலைபேசி எண் 18004251333 மற்றும்; 1100 -க்கு புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் .ஜெ.மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.

Spread the love