October 17, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

சமையல் எண்ணெய், எண்ணெய் வித்துக்களின் சேமிப்புக்கு கட்டுப்பாடு

மத்திய அரசு விதித்தது

புது தில்லி, அக்.11

சமையல் எண்ணெய்கள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் மீது சேமிப்பு கட்டுப்பாடுகளை மார்ச் 31, 2022 வரை விதிக்கும், முக்கிய முடிவொன்றை எடுத்துள்ளதாக உணவு மற்றும் பொது விநியோகத் துறை தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் முடிவு உள்நாட்டு சந்தையில் சமையல் எண்ணெய்களின் விலையை குறைப்பதன் மூலம் நாடு முழுவதும் உள்ள நுகர்வோருக்கு பெரும் நிவாரணம் அளிக்கும். சமையல் எண்ணெய்களின் உள்நாட்டு விலைகளை மேலும் குறைக்கும் தொடர்ச்சியான முயற்சியின் ஒரு பகுதியாக, அனைத்து மாநிலங்களுடனும் இந்த உத்தரவை மத்திய அரசு பகிர்ந்துள்ளது.

இந்த உத்தரவின் கீழ், அனைத்து சமையல் எண்ணெய்கள் மற்றும் எண்ணெய் வித்துக்களின் சேமிப்பு வரம்பை, அந்தந்த மாநில அரசு, யூனியன் பிரதேச நிர்வாகம், மாநில, யூனியன் பிரதேசத்தின் இருப்பு மற்றும் நுகர்வு முறையின் அடிப்படையில் விதிவிலக்குகளுடன் முடிவு செய்யும்.

உணவு மற்றும் பொது விநியோகத் துறையின் (https://evegoils.nic.in/EOSP/) இணையதளத்தில் சமையல் எண்ணெய்கள் மற்றும் எண்ணெய் வித்துகளின் கையிருப்பு தொடர்ந்து பதிவேற்றப்படுவதை மாநில அரசுகள், யூனியன் பிரதேச நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love