August 13, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

சரக்கு ரயிலில் வந்த 3,600 டன் கோதுமை

நாமக்கல், மே 11

சரக்கு ரயிலில் வந்த 3,600 டன் கோதுமை நாமக்கல், கரூர் மாவட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப் பண்ணைகளுக்குத் தேவையான மக்காச்சோளம் மற்றும் மூலப்பொருள்கள், நியாயவிலைக் கடைகளுக்கான உணவுப் பொருள்கள், வட மாநிலங்களில் இருந்து சரக்கு ரயில் மூலம் நாமக்கல்லுக்கு கொண்டு வரப்படும்.

மத்திய அரசு கரோனா நிவாரணமாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா 5 கிலோ கோதுமை விநியோகிக்க உத்தரவிட்டுள்ளது. இதற்காக, நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 3,600 டன் கோதுமையானது, ஹரியாணா மாநிலத்தில் இருந்து சரக்கு ரயிலில் 58 பெட்டிகள் மூலம் கொண்டு வரப்பட்டன.

நாமக்கல் ரயில் நிலையத்தில் இருந்து 160 லாரிகளில் ஏற்றப்பட்டு இரு மாவட்டங்களில் உள்ள இந்திய நுகர்பொருள் வாணிபக் கழகக் கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்பட்டன.

Spread the love