May 17, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

சர்வதேச அளவில் செமிகண்டக்டர்கள் தட்டுப்பாடு கம்ப்யூட்டர் உற்பத்தி செய்வதில் பாதிப்பு

புது தில்லி, மே 10

உலகளவில், மின்னணு பொருட்கள் தயாரிப்பில் மிக முக்கிய பங்காற்றும், செமிகண்டக்டர்களுக்கான தட்டுப்பாடு அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இதன் காரணமாக, இந்தியாவில் கம்ப்யூட்டர்கள், லேப்டாப் ஆகியவை கிடைப்பது, 5 முதல் 10 சதம் அளவுக்கு குறையக்கூடும் இருப்பினும், மொபைல் போன் தயாரிப்பில் பெரிய அளவிலான சிக்கல்கள் இப்போது ஏற்பட வாய்ப்பில்லை என சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், இந்தியாவின் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக, நிறுவனங்கள், போதுமான அளவுக்கு செமிகண்டக்டர்களை வாங்கி சேமித்து வைத்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

டெக்ஆர்க் எனும் சந்தை ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு நிறுவனத்தின் நிறுவனர் பைசல் கவூசாஇது குறித்து தெரிவித்துள்ளதாவது: கடந்த மார்ச் மாதத்துக்கு முன்பு வரை, செமிகண்டக்டர் பற்றாக்குறை என்பது ஒரு வதந்தி போலவே இருந்தது. நிறைய பிராண்டுகள் பற்றாக்குறை இருப்பதை ஏற்கவில்லை. ஆனால், மார்ச் மாதத்துக்குப் பின் பெரிய பெரிய பிராண்டுக¼ள பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதையும்; அதனால் எதிர்காலத்தில் பிரச்னைகளை சந்திக்க வேண்டியதிருக்கும் என்பதையும் வெளிப்படையாக தெரிவிக்க துவங்கின.

மேலும், கடந்த ஆண்டு கோவிட் தொற்றால் வீட்டிலிருந்தே பணியாற்றும் சூழலுக்கு தள்ளப்படவும், செமிகண்டக்டர்களுக்கான தேவை அதிகரித்துவிட்டது. அதன் பாதிப்பு தொடர்கிறது. இந்த பற்றாக்குறை மேலும் சில காலாண்டுகளுக்கு தொடரும் என அவர் தெரிவித்தார்.

Spread the love