June 21, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

சர்வதேச கிரெடிட் கார்டு நிறுவனங்களுக்கு ஆர்பிஐ தடை

புது தில்லி, ஏப்.26

சர்வதேச கிரெடிட் கார்டு நிறுவனங்களான, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், டைனர்ஸ் கிளப் ஆகியவை, மே, 1ம் தேதி முதல், புதிய வாடிக்கையாளர்களை சேர்ப்பதற்கு, ஆர்பிஐ தடை விதித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: தரவுகள் சேமிப்பில் விதிமுறைகளை மீறியதற்காக, இந்த தடையை ஆர்பிஐ விதிப்பதாக தெரிவித்துள்ளது.

ஆர்பிஐ-யின் இந்த உத்தரவால், தற்போது இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்றும் தெரிவித்துள்ளது.

கடந்த, 2018ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட, தகவல் சேமிப்பு விதிமுறைகளின் கீழ், பணம் வழங்கும் நிறுவனங்கள், இந்திய வாடிக்கையாளர்கள் தொடர்பான தகவல்களை, இந்தியாவிலேயே சேமித்து வைக்க வேண்டும். ஆனால், இந்த விதிமுறைகள் மீறப்பட்டதால், இவ்விரு நிறுவனங்களும் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் நிறுவனம், தரவுகளை உள்நாட்டில் சேமிப்பது குறித்து, ஆர்பிஐ-யுடன் பேச்சு நடத்தி வருவதாகவும்; விதிமுறைகளுக்கு ஏற்ப மேற்கொள்ளப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் குறித்து விளக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும், ஆர்பிஐ-யின் நடவடிக்கையால் ஏமாற்றம் அடைந்திருப்பதாகவும், விரைவில் ஆர்பிஐ-யுடன் இணைந்து, பிரச்னைகளை தீர்ப்போம் என்றும், அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது. அத்துடன், இந்தியாவில் தற்போதுள்ள வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் சேவைகளை இது பாதிக்காது என்றும், வாடிக்கையாளர்கள் கிரெடிட் கார்டுகளை தொடர்ந்து பயன்படுத்த முடியும் என்றும்செய்திகள் வெளியாகியுள்ளது.

Spread the love