May 18, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

சலூன் துறையில் கால்பதிக்கும் அமேசான் நிறுவனம்

லண்டன், ஏப்.22

அமேசான் நிறுவனம் லண்டனில் சலூன் கடையைத் திறக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதன் மூலம் முடித்திருத்தும் தொழிலிலும் அமேசான் கால்பதிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. லண்டன் நகரின் பிரஷ்ஃபீல்ட் தெருவில் தமது முதல் சலூன் கடையை அமேசான் நிறுவனம் அமைக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 1,500 சதுர அடி பரப்பளவில் இரண்டு தளங்களைக் கொண்டவகையில் பிரம்மாண்டமாக அமையவுள்ளது.

வாடிக்கையாளர்கள் விரும்பும்படி துல்லியமாக முடிதிருத்தம் செய்ய அகுமேட்டட் ரியாலிட்டி போன்ற செயலி தொழில்நுட்பங்களையும் சலூன் கடையில் பயன்படுத்தவுள்ளதாகவும், இதன்மூலம் முடிதிருத்தம் செய்துகொள்ள வருபவர்கள் எந்தவகையான சிகையலங்காரங்களை விரும்புகின்றனர் என்பதை முன்கூட்டியே துல்லியமாக அறிந்துகொள்ள இயலும் என தெரிவித்துள்ளது.

மேலும், அழகுசாதன பொருள்கள் குறித்த முழு விவரங்கள் அடங்கிய மென்திரை இயங்கும் என்றும், அதில் தேவையான பொருள்களை கியூஆர் கோடை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ளவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. முதல்கட்டமாக அமேசானில் உள்ள ஊழியர்களுக்காக மட்டுமே அமேசான் சலூன் செயல்படும் என்று அமேசான் தெரிவித்துள்ளது.

Spread the love