August 4, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

சவ்சவ் விலை கடும் சரிவு விவசாயிகள் கவலை

திண்டுக்கல், மே 21

தாண்டிக்குடி பகுதியில் விளையும் ‘சவ்சவ்’ விலை சரிவடைந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வட்டாரம், தாண்டிக்குடி பகுதியில் ஏராளமான ஏக்கரில் பந்தல் அமைத்து சவ்சவ் சாகுபடி நடக்கிறது. சில மாதங்களுக்கு முன் நடவு செய்த இப்பயிர், தற்போது காய்க்க தொடங்கி உள்ளது. விவசாயிகளின் முக்கிய வருவாயாக திகழ்ந்த, சவ்சவ் மொசைக் வைரஸ் மற்றும் காட்டுப் பன்றிகளால் சாகுபடி பரப்பு சுருங்கியது. தற்போது இவற்றை வலை அமைத்து விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தடியன் குடிசை தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் வைரஸ் பாதிப்பை தவிர்க்க நுண்ணூட்டச் சத்துக்களை பரிந்துரைத்துள்ளதால் நன்கு மகசூல் காண்கிறது. இங்கு அறுவடையாகும் காய்கள் மதுரை, திண்டுக்கல், திருச்சி மார்க்கெட்டுக்கு அனுப்பப்படுகிறது. துவக்கத்தில் கிலோ ரு.15 வரை விற்பனையானது. தற்போது, ஊரடங்கால் கிலோ ரூ.6க்கு விற்பனையாகிறது. இந்த விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

Spread the love