June 29, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

சாக்கோட்டை வட்டாரத்தில் நிலக்கடலை வரிசை விதைப்பு செயல்விளக்கம்

தஞ்சாவூர், ஏப்.6

தஞ்சாவூர் மாவட்டம், சாக்கோட்டை வட்டாரத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் செயல்பட்டு வரும் விரிவாக்க சீரமைப்புத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நிலக்கடலை பயிரில் வரிசை விதைப்பு செயல்விளக்கங்கள் நடத்தப்பட்டன. சாக்கோட்டை வட்டாரத்தின் வேளாண்மை உதவி இயக்குநர் சண்முக ஜெயந்தி வழிகாட்டுதலின் படி அட்மா திட்ட பணியாளர்கள் அம்மனாபட்டி பெத்தாட்சி குடியிறுப்பு மற்றும் பெரியகோட்டை ஆகிய கிராமங்களில் நிலக்கடலை சாகுபடி செய்யும் விவசாயிகளை தேர்வுசெய்து வரிசை விதைப்பு பற்றிய தொழில்நுட்பங்களை எடுத்துரைத்து செயல்விளக்கதிடல்கள் அமைக்கப்பட்டது. சாதாரணமாக நிலக்கடலை சாகுபடிசெய்வதற்கும் இயந்திரத்தின் மூலம் வரிசை விதைப்பு செய்து அவற்றுடன் சில தொழில்நுட்பங்களை கடைப்பிடிக்க அறிவுறுத்தி அதனால் வரும் மகசூல் அதிகரிப்பை விவசாயிகள் கண்டுணர செய்யப்பட்டது.

கிராமங்களிலுள்ள ஆர்வமுள்ள விவசாயிகளை பஞ்சாயத்து தலைவர் மற்றும் அட்மா திட்டத்தில் பணிபுரியும் உழவர் நண்பர்கள் மூலம் தேர்வு செய்து செயல்விளக்க திடல்கள் அமைக்கப்பட்டது. நிலக்கடலை சாகுபடியில் கூலி ஆட்கள் செலவு அதிகமாக உள்ளது. கூலி ஆட்கள் மூலம் விதைப்பு செய்தல் களை எடுத்தல் மற்றும் மண் அணைத்தல் போன்ற செயல்பாடுகளுக்கு அதிக கூலி ஆட்கள் தேவைப்படுகிறார்கள் செலவு அதிகரிப்பதுடன் ஆட்கள் பற்றாக்குறையும் உள்ளது. இந்த நிலக்கடலை விதைப்பு கருவி மூலம் கூலி ஆட்கள் செலவு குறைந்தது மட்டுமல்லாமல் விதை செலவு (10 கிலோ) குறைந்தது. செடிகள் சரியான இடைவெளியில் வரிசையாக முளைத்ததால் செடிகளின் எண்ணிக்கையை எளிதாக பராமரிக்கலாம். கடந்த வருடங்களில் சாகுபடி செய்த நிலக்கடலை பயிரில் தாக்கப்பட்ட புச்சி நோய்களும், இந்தாண்டு வரிசை விதைப்பின் மூலம் பயிரிடப்பட்ட நிலக்கடலையில் கணிசமாக குறைந்துள்ளது. இதனால் பயிர் பாதுகாப்பு மருந்துக்கான செலவும் குறைந்தது. கடந்த ஆண்டு நிலக்கடலை சாகுபடியில் 550 கிலோ/ஏக்கர் மகசுல் கிடைத்தது. நிகர இலபமாக ரூ.8250/- வருமானம் கிடைத்தது. ஆனால் நிலக்கடலை இயந்திர விதைப்பு மற்றும் கீழ்க்கண்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்தியதன் மூலம் 850 கிலோ/ஏக்கர் மகசுல் கிடைத்தது. நிகர இலபமாக ரூ.20000/- வருமானம் கிடைத்தது.

நிலக்கடலை சாகுபடியில் கடைப்பிடிக்கப்பட்ட தொழில்நுட்பங்கள்-

  1. டி.விரிடி. மற்றும் ரைசோபியம் கொண்டு விதைநேர்த்தி செய்யப்பட்டது.
  2. விதைப்பு கருவி மூலம் வரிசை விதைப்பு செய்யப்பட்டது.
  3. ஜீப்சம் 160 கிலோ இடப்பட்டது.
  4. கடலை நுண்ணுரம் 5 கிலோ இடப்பட்டது.
  5. மண் ஆய்வுபடி உரமேலாண்மை செய்யப்ட்டது.

6. உட்டச்சத்து கலவை தெளிக்கப்பட்டது.

Spread the love