January 23, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

சாத்தூர் வட்டாரத்தில் பருத்தி பண்ணைப்பள்ளி பயிற்சி வகுப்பு

விருதுநகர், டிச.24

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டார வேளாண்மைத்துறை மூலம் விரிவாக்கச் சீரமைப்புத் திட்டம் (அட்மா திட்டம்) 2021-22ன் கீழ் பண்ணைப்பள்ளி என்ற இனத்தின் கீழ் நடப்பு ஆண்டு ஒ.மேட்டுப்பட்டி கிராமத்தில், பருத்தியில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை தலைப்பில் 25 விவசாயிகளுக்கு பண்ணைப்பள்ளி பயிற்சி வகுப்பு 23.12.2021 அன்று நடைபெற்றது. இந்த பயிற்சி வகுப்பில் சாத்தூர் வட்டார வேளாண்மை அலுவலர் தா.மலர்விழி, கலந்து கொண்டு பண்ணைப் பள்ளியின் நோக்கம், விதைப்பு முதல் அறுவடை வரையிலான தொழில்நுட்ப விபரங்கள் மற்றும் வேளாண்மைத்துறை மூலம் செயல்படுத்தப்படும் வேளாண் திட்டங்கள் பற்றியும் விரிவாக எடுத்துக் கூறினார்.

கலசலிங்கம் பல்கலைக்கழக பூச்சியியல் துறை உதவி பேராசிரியர், முனைவர் அய்யனார், பருத்தியில் சாறு உறிஞ்சும் பூச்சிகள் பற்றியும் அதற்கான மேலாண்மை முறைகள் பற்றியும் எடுத்துரைத்தார். மேலும் இப்பயிற்சி வகுப்பில் உதவி பேராசிரியர் முனைவர் தூண்டில்காளை, கலந்து கொண்டு மண்வளம் பற்றியும் மண்மாதிரி எடுக்கும் முறைகள் பற்றியும் எடுத்துரைத்தார்.

மண் மாதிரி எடுக்கும் முறைகள் செயல்விளக்கமாக விவசாயிகளுக்கு செய்து காண்பிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விரிவாக்க சீரமைப்புத்திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் சு.கணேஷ்குமார், உதவி தொழில்நுட்ப மேலாளர் பெ.அருண்குமார் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் சரண்யா ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

Spread the love