புதிய கேலக்ஸி ஏ22 ஸ்மார்ட்போனை சாம்சங் நிறுவனம் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
பிஐஎஸ் மற்றும் எச்டிஎம்எல்எஸ் பட்டியலில் இந்த மொபைல் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஸ்மார்ட்போனானது 4ஜி மற்றும் 5ஜி ஆகிய இரண்டு வேரியண்ட்களில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பாண்டின் பிற்பகுதியில் அறிமுகப்படுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி ஏ22 மொபைலானது குவாட் ரியர் கேமரா அமைப்புடன் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 48 எம்பி பிரைமரி கேமரா கொண்டிருக்கும் எனக் கூறப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 13எம்பி செல்ஃபீ கேமரா இருக்கும்.
இந்த ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் 2774பிபிஎல் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும் எனக் கூறப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு வி11 மூலம் இயக்கப்படும் எனவும், ஆக்டோகோர் 2.2ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 750ஜி புராஸசரைக் கொண்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போனைப் போன்ற தோற்றத்தில் வரும் எனக் கூறப்படுகிறது.