July 25, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

சாம்சங் கேலக்ஸி ஏ52 5ஜி இந்தியாவுக்கு எப்போது வருகிறது?

கேலக்ஸி ஏ52 5ஜி ஸ்மார்ட்போனை கடந்த மாதத் துவக்கத்தில் ஐரோப்பிய சந்தையில் சாம்சங் நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

அது முதலே இந்த ஸ்மார்ட்போன் எப்போது இந்தியாவுக்கு வரும் என எதிர்பார்ப்பு எழுந்தது. இந்தியாவில் கேலக்ஸி ஸ்மார்ட்போன்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. நடுத்தர வயதினர் பெரும்பாலும் சாம்சங் ஸ்மார்ட்போன்களையே விரும்புகின்றனர்.

இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்படுவது தொடர்பாக எந்தத் தகவலும் இல்லாமல் இருந்த நிலையில், தற்போது அது உறுதி செய்யப்பட்டுள்ளது.

BIS இணையதளத்தில் இந்த ஸ்மார்ட்போன் வேரியண்ட் எண் SM-A526B / DS எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

முன்னதாக புளூடூத் எஸ்ஐஜி இணையதளத்திலும் இது இடம்பெற்றிருந்தது. இதையடுத்து இந்தியாவில் சில வாரங்களிலேயே இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் எஃப்.எச்டி பிளஸ் தெளிவு மற்றும் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் சூப்பர் அமோஎல்இடி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது . இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரியைப் பெற்றுள்ளது. மேலும் இது யுஐ 3.1 சார்ந்த அண்ட்ராய்டு 11 இயங்குதளத்தில் செயல்படும். அத்துடன் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

இந்த மொபைல் பின்புறத்தில் ஒரு குவாட்-கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இது 64 எம்பி முதன்மை கேமரா, 12 எம்பி அல்ட்ரா-வைட்-ஆங்கிள் சென்சார், 5 எம்பி டெப்த் சென்சார் மற்றும் 5 எம்பி மேக்ரோ லென்ஸ் ஆகியவறைக் கொண்டுள்ளது. அத்துடன் 32 எம்பி செல்ஃபீ கேமராவைக் கொண்டுள்ளது.

இந்தப் புதிய மொபைல் 128 ஜிபி மற்றும் 256ஜிபி ஆகிய இரண்டு மெமரிகளில் கிடைக்கிறது. 1 டிபி வரை மெமரியை நீட்டிக்க மெமரி கார்டு ஸ்லாட் தரப்பட்டுள்ளது.

இந்தப் போனில் 4,500 எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது. இந்திய மதிப்பில் அடிப்படை வேரியண்ட் மாடல் ரூ.30,000 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

Spread the love