புது தில்லி, மே 7
சாம்சங் நிறுவனம் விரைவில் தனது புதிய சாம்சங் கேலக்ஸி டேப் ஏ7 லைட் சாதனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்த அசத்தலான சாதனத்தின் சிறப்பம்சங்களாவது:
சாம்சங் கேலக்ஸி டேப் ஏ7 லைட் சாதனம் ஆனது 8.4-இன்ச் டிஸ்பிளே, 800×1340 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவரும்.
ஒற்றை பிரைமரி கேமரா, பவர் பட்டன், பக்கவாட்டுகளில் வால்யூம் ராக்கர், கைரேகை சென்சார், செல்பீ கேமராக்கள் என பல்வேறு ஆதரவுகள் உள்ளன.
மீடியாடெக் ஹீலியோ பி22டி பிராசஸர் வசதி உள்ளது எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சாதனத்தில் 5000 எம்ஏஎச் பேட்டரி, 15வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் போன்ற அம்சங்கள் இடம்பெறும் என்று கூறப்பட்டுள்ளது.
ப்ளூடூத் 5,வைபை, 4ஜி எல்டிஇ, யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி டேப் ஏ7 லைட் மாடல். குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.