January 23, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

சாலைகளில் மின் வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படும் மக்களவையில் நிதின் கட்கரி தகவல்

புது தில்லி, டிச.22

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிதின் கட்கரி கீழ்காணும் தகவல்களை அளித்தார்.

மின்சார வாகனங்கள் மற்றும் மாற்று எரிபொருளைப் பயன்படுத்துவதற்கு கடந்த இரண்டு ஆண்டுகளில் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் எடுத்த நடவடிக்கைகள் பின்வருமாறு:

பேட்டரியால் இயங்கும் வாகனங்களுக்கு பதிவு சான்றிதழ் கட்டணம் செலுத்துவதில் இருந்து சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் விலக்கு அளித்துள்ளது.

பேட்டரிகள் இல்லாத மின்சார வாகனங்களின் விற்பனை மற்றும் பதிவு தொடர்பான ஆலோசனையை அனைத்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் வழங்கியுள்ளது.

மாற்று எரிபொருள்களின் உமிழ்வு தரநிலைகள் தொடர்பான பல்வேறு விதிகள்/விதிமுறைகளை சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தால் வழங்கப்படும் சாலையோர வசதிகளின் ஒரு பகுதியாக சாலை உருவாக்க நிறுவனத்தால் மின்சார வாகன சார்ஜிங் நிலைய வசதிகள் வழங்கப்பட உள்ளன.

இதுபோன்ற 39 வசதிகளை ஏற்கனவே ஆணையம் வழங்கியுள்ளது மற்றும் 103 வசதிகளுக்கான ஒப்பந்தங்கள் வழங்கப்பட உள்ளன. ஏற்கனவே வழங்கப்பட்ட பணிகள் 2022-23 நிதியாண்டின் இறுதிக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேசிய நெடுஞ்சாலைகளை பழுதுபார்க்க
தனியார் நிறுவனங்களை ஈடுபடுத்துதல்.

மாநிலங்களைவயில் கேட்கப்பட்ட மற்றொரு கேள்விக்கு பதிலளித்துள்ளதாவது:

தேசிய நெடுஞ்சாலைகளை பராமரிக்கவும், பழுது பார்க்கவும் தனியார் நிறுவனங்களை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுங்சாலை துறை அமைச்சகம் ஈடுபடுத்துகிறது. இதில் 3 வகையான முறைகள் உள்ளன. முதலாவது முறையில், பழுது பார்க்கும் பணியின் அளவுக்கு ஏற்ப ஒப்பந்தக்காரர்களுக்கு கட்டணம் செலுத்தப்படுகிறது. 2வது முறையில் செயல்பாடு அடிப்படையிலான பராமரிப்புக்கு கட்டணம் செலுத்தப்படுகிறது. இந்த வகை ஒப்பந்தத்தில், ஒப்பந்த பராமரிப்பு காலத்தில், சாலைகளை ஒப்பந்தக்காரர், விதிமுறைகள்படி பராமரிக்கிறார். இதற்கான தொகை ஒப்பந்தக்காரருக்கு வழங்கப்படுகிறது. 3வது முறையில், அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் பராமரிப்பு காலத்தில் சாலைகளை பராமரிக்க வேண்டும். இந்த பராமரிப்பு மற்றும் பழுது பார்க்கும் பணிகள் ஆணையத்தின் பொறியாளரால் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன.

Spread the love