August 14, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

சின்ன வெங்காயம் சாகுபடிக்கு விவசாயிகள் ஆர்வம்

தேனி, மே 19

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி பகுதியில் தற்போது நிலவும் சீதோஷ்ண நிலை வெங்காயம் சாகுபடிக்கு ஏற்றதாக உள்ளது. இதனால் ஆண்டிபட்டி அருகே டி.சுப்புலாபுரம், குன்னூர், அரப்படித்தேவன்பட்டி, ஏத்தக்கோவில், சித்தயகவுண்டன்பட்டி பகுதியில் கிணற்றுப்பாசன நிலங்களில் விவசாயிகள் காய்கறி சாகுபடியில் சின்னவெங்காயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். தற்போது கிலோ ரூ.40 முதல் ரூ.50 வரை உள்ளதால் விரும்பி சாகுபடி செய்கின்றனர். நடவு செய்யப்படும் சின்னவெங்காயம் இன்னும் இருமாதத்தில் அறுவடைக்கு வந்து விடும் என தெரிவித்தனர்.

Spread the love