July 25, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

சிப் தட்டுப்பாடு எதிரொலி 3 தொழிற்சாலைகள் ஹோண்டா தற்காலிக முடக்கம்

டோக்கியோ, ஏப்.29

ஜப்பான் நாட்டின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமாகத் திகழும் ஹோண்டா மோட்டார்ஸ் நிறுவனம் சிப் தட்டுப்பாடு காரணமாகத் தனது 3 தொழிற்சாலைகளை மே மாதம் தற்காலிகமாக மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ஹோண்டா நிறுவனத்தின் தயாரிப்புகளுக்குக் கம்பியூட்டர் சிப்களை டெலிவரி செய்யும் ஜப்பான் ரெனிசாஸ் எல்கட்ரானிக் கார்ப் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டு உள்ள காரணத்தாலும், அமெரிக்காவின் டெக்சாஸ் பகுதியில் புயல் நிலவும் காரணத்தால் அமெரிக்காவிலும் இருந்து சப்ளை தடை பெற்று உள்ளதாக தெரிவித்துள்ளது.

இதன் மூலம் ஜப்பான் நாட்டின் சர்டாமா பகுதியில் இருக்கும் கார் உற்பத்தி தொழிற்சாலை 6 நாட்களும், சூசுகா தொழிற்சாலை 5 நாட்களும் முடங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது. இதேபோல் கயோடோ தொழிற்சாலையில் ஏற்கனவே உற்பத்தி குறைப்பு செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

3 முக்கியத் தொழிற்சாலைகளிலும் உற்பத்தி முடங்கியுள்ள காரணத்தால் ஹோண்டாவின் கார் விற்பனை பெரிய அளவிலான பாதிப்பை எதிர்கொள்ளும். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் மிகவும் தாமதமாகக் கார்களை டெலிவரி பெற வேண்டி வரும். இதுமட்டும் அல்லாமல் ஜப்பான் தொழிற்சாலையில் இருந்து பிற நாடுகளுக்குக் கார்களை ஏற்றுமதி செய்யும்பட்சத்தில் ஹோண்டா நிறுவனத்தின் உலக நாடுகளில் இருக்கும் வர்த்தகமும் பாதிக்கும் என தெரிவித்துள்ளது.

Spread the love