August 8, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

சிறப்பு கிராம சபை கூட்டம்

சேலம், ஏப்.25

சேலம் மாவட்டம், ஏற்காடு வட்டாரத்தில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் கண்காணிப்பு அலுவலர் தி.கௌதமன் கலந்து கொண்டு திட்டம் குறித்து பேசினார்.

முன்னதாக வட்டாரத்தில் உள்ள ஒன்பது கிராம ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் அந்தந்த துறை சார்பாக செய்திருந்தனர்.
கண்காணிப்பு அலுவலர் வாழவந்தி கிராம ஊராட்சி தலைவர் பாப்பு வெங்கடாசலம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயிகள் கடன் அட்டை பெறுதல், பயிர் காப்பீடு மற்றும் அனைத்து திட்டங்கள் தொடர்பான விவரங்கள் பதிவு செய்தமையினை ஆய்வு செய்தார்.
அதனை தொடர்ந்து தலைசோலை, ஏற்காடு, செம்மநத்தம் ஆகிய பஞ்சாயத்துகளில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டார்.

ஏற்காடு வேளாண் உதவி இயக்குநர் ரமேஷ் மற்றும் தோட்ட கலை உதவி இயக்குநர் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் உடன் இருந்தனர்.
தகவல் : தி.கௌதமன், விதைச்சான்று உதவி இயக்குநர் சேலம்.

Spread the love