August 14, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

சிறப்பு ரயில்களில் பயணிக்க இ-பதிவு முறை திங்கள் கிழமை அமலுக்கு வந்தது

சென்னை

பொதுமக்கள் சிறப்பு ரயில்களில் பயணிப்பதற்கு இ-பதிவு முறை அமலுக்கு வந்துள்ளது.

கொரோனா இரண்டாம் அலையின் தீவிரம் அதிகரித்து வரும் நிலையில் தெற்கு ரயில்வேயில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன. இருந்தபோதும் ஒரு சில வழித்தடங்களில், பயணிகள் வருகை இன்னமும் ஓரளவு இருக்கிறது. அந்த வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தமிழக அரசின் புதிய உத்தரவுப்படி, ரயில்களில் பயணிக்க இ-பதிவு முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பயணிகளின் வருகையைப் பொறுத்து குறைந்த அளவில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருவதாகவும், ஏற்கெனவே, மாநிலங்களுக்கு இடையே பயணிக்கும் சிறப்பு ரயில்களில் பயணிகளுக்கு இ-பதிவு முறை கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து ரயில்வே பயணிகளுக்கும் இ-பதிவு முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, தமிழக அரசின் புதிய உத்தரவுப்படி, இ-பதிவு செய்து அத்தியாவசிய தேவையான திருமணம், முக்கிய உறவினர்களின் இறப்பு, மருத்துவ சிகிச்சை, முதியோருக்கான உதவி போன்றவற்றுக்கு மாவட்டத்துக்கு உள்ளேயும், மாவட்டங்களுக்கு இடையேயும் பயணம் மேற்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறையைப் பொதுமக்கள் கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Spread the love