October 17, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

சிறிய நிதி வங்கிக்கான உரிமத்தை சென்ட்ரம், பாரத்பேவிற்கு வழங்கியது ஆர்பிஐ

மும்பை, அக்.13

பாரத் பே மற்றும் சென்ட்ரம் கூட்டமைப்பிற்கு சிறிய நிதி வங்கி அமைப்பதற்கான உரிமத்தை ஆர்பிஐ வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

சுமார் 6 ஆண்டுகளுக்கு பிறகு வங்கி உரிமம் வழங்கப்பட்டுள்ளது. எங்கள் மீது நம்பிக்கை வைத்து உரிமம் வழங்கிய ஆர்பிஐ -க்கு நன்றி என சென்ட்ரம் பைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த வங்கி யுனைட்டி வங்கி என்ற பெயரில் செயல்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக இந்த இரண்டு நிறுவனங்களும் இணைந்து வங்கி அமைக்கின்றனர். இந்தியாவின் முதல் டிஜிட்டல் வங்கியாக இது இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரத் பே மற்றும் சென்ட்ரம் நிறுவன தலைவர்கள் தங்களுக்கு உரிமம் வழங்கிய ஆர்பிஐ-க்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

Spread the love