January 23, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

சிறுதானிய உற்பத்தியில் விவசாயிகள் ஆர்வம்

திருப்பூர், மே 19

மடத்துக்குளம் பகுதியில், விவசாயிகள் கம்பு சாகுபடி செய்து வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் ஆயக்கட்டு பகுதியில், அமராவதி அணையின் நீர் இருப்பை பயன்படுத்தி சம்பா, குறுவை என இரு பருவத்தில் சாகுபடி நடக்கிறது. பழைய ஆயக்கட்டு பகுதியில், நெல், கரும்பு, வாழை உள்ளிட்டவை முக்கிய பயிராக உள்ளன. புதிய ஆயக்கட்டு பகுதியில், மக்காச்சோளம் மற்றும் பல வகையான சிறு தானிய பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இதில் கம்பு பயிர் குறிப்பிடத்தக்கதாக உள்ளது. தற்போது மைவாடி, துங்காவி, என்.ஜி.புதூர் உள்ளிட்ட பகுதியில் கம்பு சாகுபடி செய்யப்பட்டு வளர்ந்து, அறுவடையை எதிர்நோக்கியுள்ளது.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ஒரு ஏக்கருக்கு, 4 கிலோ வரை விதை கம்பு தேவைப்படுகிறது. விதைப்பு தொடங்கி அறுவடை வரை, ரூ.12,000 வரை செலவாகிறது. சீராக பராமரித்து வளர்க்கும் போது, மூன்று மாதங்களில் அறுவடை செய்யலாம். ஆரோக்கியமான விளைச்சல் இருந்தால், 1.5 டன் வரை மகசூல் கிடைக்கும். பாசன நீர் பற்றாக்குறை மற்றும் கிணற்றுப்பாசனம் உள்ள பகுதிகளில், விவசாயிகளுக்கு கைகொடுக்கும் பயிராக கம்பு உள்ளது. இதனால் பல இடங்களில் பயிர் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.

Spread the love