June 24, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

சிறுவாணி அணையின் நீர்மட்டம் உயர்வு

கோவை, ஜூன் 1

கோவை மாநகராட்சி மற்றும் வழியோர கிராம மக்களுக்கு மிக முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவத சிறுவாணி அணை ஆகும். தற்போது அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில், தென்மேற்கு பருவ மழை பெய்யத் தொடங்கி உள்ளது. செவ்வாய்க்கிழமை காலை, 8 மணி நிலவரப்படி, அணை பகுதியில், 21 மி.மீ., மழை பதிவாகி இருந்தது. அடிவாரத்தில் மழைப்பொழிவு இல்லை.

ஆனாலும் சிற்றருவிகளில் நீர் வரத்து காணப்படுவதால் அணையில் 5 செ.மீ., நீர் மட்டம் உயர்ந்திருக்கிறது. அதன்படி செவ்வாய் அன்று 18.5 அடிக்கு நீர் இருப்பு இருந்தது. 4-வது வால்வு மூடப்பட்டு இருப்பதால், 5 கோடி லிட்டரே எடுக்கப்பட்டது. அதில், 3.2 கோடி கோவை மாநகராட்சி பகுதி மக்களுக்கு வினியோகிக்கப்பட்டது.

பருவ மழை தொடரும் என்பதால், நீர் மட்டம் உயரும் வாய்ப்புள்ளது. அப்போது கூடுதலாக தண்ணீர் எடுக்கப்படும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Spread the love