July 25, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

சில்வர் வண்ண சேலையில்
பளபளப்பாக தோன்றிய மாதுரி

கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை நாட்டின் பல்வேறு மாநிலங்களை வீடுகளுக்குள் முடங்கச் செய்து விட்டது. அத்துடன் கொரோனா தொடங்கியதில் இருந்தே நாம் எப்போதும் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஃபேஷன் தகவல்களும் குறைந்து விட்டது.

இரண்டாம் அலையின் பரவல் அதிகமாக இருப்பதுடன் பாதிப்புகளும் அதிகமாக இருந்து வருகிறது. ஐபிஎல் போட்டித் தொடரையும் கைவிட வேண்டிய நிலைமை ஏற்பட்டு விட்டது.

இதுஒரு புறமிருக்க சில்வர் வண்ண சேலையில் பளபளப்பாக தோன்றி ரசிகர்களை பரவசப்படுத்தியுள்ளார் நடிகை மாதுரி தீட்சித். மாதுரி தீட்சித்திற்கு இந்தியாவில் மட்டுமல்லாமல், உலகம் முழுவதுமே ஏராளமான ரசிகர்கள் இருப்பது அனைவரும் அறிந்ததே.

சமீபத்தில் தான் கோவிட் தடுப்பூசி போட்டுக் கொண்டதாக தெரிவித்திருந்தார் மாதுரி. இந்த நிலையில் டான்ஸ் தீவானே 3 ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது சில்வர் சேலையில் தோன்றி அசத்தியுள்ளார் அவர். இது தொடர்பான படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிந்துள்ளார்.

டிசைனர் மணீஷ் மல்கோத்ரா என்பவர் இந்த ஆடையை வடிவமைத்துள்ளார். சேலைக்கு மேட்சிங் ஆக குந்தன் சோக்கர் நெக்லஸையும், இடதுகையில் சில்வர் பிரேஸ்லெட்டும் அணிந்து டான்ஸ் தீவானே 3 நிகழ்ச்சியின் ஔிப்பதிவில் கலந்துகொண்டுள்ளார்.

சேலைகள், லெஹங்காக்கள் என எதில் தோன்றினாலும் பாரம்பரியம் பளிச்சிடும் பெண்ணாகவே வலம் வருகிறார் மாதுரி.

Spread the love