October 17, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

சீனாவில் உற்பத்தியாகும் கார்களை இந்தியாவில் விற்க வேண்டாம் -டெஸ்லா நிறுவனத்திடம் கட்கரி கோரிக்கை

புது தில்லி, அக்.9

இந்திய நாட்டில் டெஸ்லா நிறுவனத்தின் எலக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்யுமாறு பலமுறை அந்த நிறுவனத்திடம் தான் கேட்டுக் கொண்டுள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி தகவல் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்யுமாறு டெஸ்லா நிறுவனத்திடம் நான் பலமுறை சொல்லிவிட்டேன் என்றும், அதற்கான ஆதரவு மற்றும் சலுகைகளை தருவதாகவும் தெரிவித்துள்ளேன் என்றார். அதே நேரத்தில் சீனாவில் உற்பத்தி செய்யப்படும் கார்களை இந்தியாவில் விற்பனை செய்ய வேண்டாம் என தெரிவித்துள்¼ளன் என்றும் கட்கரி தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கார்களை வேண்டுமானால் ஏற்றுமதி செய்து கொள்ளுங்கள் எனவும் தெரிவித்துள்¼ளன் என அவர் தெரிவித்துள்ளார்.

இறக்குமதி வரியை குறைக்குமாறு மத்திய அரசிடம் டெஸ்லா நிறுவனம் கோரிக்கை வைத்துள்ள நிலையில் இதனை அவர் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் எலக்ட்ரிக் வாகனத்தை தான் குறைத்து மதிப்பிடவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love