January 23, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

சுத்திகரிக்கப்பட்ட பாமாயிலுக்கான இறக்குமதி வரி 12.5 சதமாக குறைப்பு

புது தில்லி, டிச.22

சுத்திகரிக்கப்பட்ட பாமாயிலுக்கான இறக்குமதி வரியை மத்திய அரசு 12.5 சதமாக மத்திய அரசு குறைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது:

நாடெங்கும் சமையல் எண்ணெய் வகைகளின் விலை கடந்த ஓராண்டாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் விலையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக சுத்திகரிக்கப்பட்ட பாமாயிலுக்கான இறக்குமதி வரியை 17.5 சதத்தில் இருந்து 12.5 சதமாக குறைப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், வரிக்குறைப்பு அறிவிப்பு வரும் மார்ச் மாதம் வரை அமலில் இருக்கும் என மத்திய மறைமுக வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் பல்வேறு வகை சமையல் எண்ணெய்களுக்கான வரி ஏற்கனவே குறைக்கப்பட்டுள்ளது.

Spread the love